Search This Blog

Jun 26, 2023

நாளாச்சு

நாளாச்சு

நானும் என் மனைவியும் இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்கா வந்தடைந்தோம். நான்கு ஆண்டுகளுக்குப் பின் இந்த அமெரிக்க விஜயம். முன்சென்ற வருகைகளின் போது நான் பார்த்து மகிழ்ந்த இயற்கைக் காட்சிகளை  மீண்டும் நேற்று இரவிலும் இன்று காலையிலும்  என் மகனது வீட்டின் வெளி முற்றத்தில் அமர்ந்து ரசித்தபோது எழுந்த எண்ணங்கள் இவை- ஒரு பாடல் வடிவில்!

அன்புடன் 

ரமேஷ்   

நாளாச்சு

வெட்ட வெளியில் உட்கார்ந்திருந்து வானைப் பார்த்து நாளாச்சு

சிட்டுக் குருவிகள் சிறகை விரித்து பறப்பதைப் பார்த்து நாளாச்சு


மைனாப் பறவைகள் வானுலா வுவதைப்  பார்த்து மகிழ்ந்து நாளாச்சு

ஆனந்த ராகம் அவைகள் பாடுவதைக் கேட்டுக் குளிர்ந்து  நாளாச்சு..


வட்ட நிலவொளி பட்டுப் புல்வெளி சொலிப்பதைப் பார்த்து நாளாச்சு

வீட்டுத் தோட்டத்தில் காட்டு மான் கூட்டம் மேய்வதைப் பார்த்து நாளாச்சு


உண்டு கொழுத்த குண்டு அணில்கூட்டம்  ஓடுவதைக் கண்டு நாளாச்சு

செண்டு செண்டாகப் பூத்த மலர்க்  கொத்தில் வண்டுகள் பார்த்து நாளாச்சு
 

இத்தனை அழகையும் மொத்தமாயிங்கு சேர்த்துத் தந்த இறைவனையே 

நித்தமும் இந்த இயற்கையின்  வடிவில் பார்த்திடும் நேரம் வந்தாச்சு.

23 comments:

  1. This poem brings the beauty of nature in front of me( which you are enjoying ). Here’s our best wishes for your happy stay in US. By the way which is the place?

    ReplyDelete
    Replies
    1. Thanks BV. We are in ShortHills, New Jersey.

      Delete
  2. Nice!Have a pleasant stay Ramesh!!

    ReplyDelete
  3. உங்கள் கவிதை பார்த்து நாளாச்சு, sir. Have a nice stay and enjoy the nature.

    ReplyDelete
  4. ,அனிபவி ரமேஷா அனுபவி

    ReplyDelete
  5. உற்ற உறவுகளின்உபசரிப்பையும், இயற்கை அழகையும் அனுபவிக்கிறேன்!

    ReplyDelete
  6. Wish You Happy Stay at Your Son's home

    ReplyDelete
  7. Nice poem Ramesh. Enjoy your stay in NJ. One doubt : Are the deer jumping in Sandeep's garden ? Wonderful.

    ReplyDelete
    Replies
    1. They make a clandestine appearence, now and then.

      Delete
  8. Good evening Sir enjoy with Grand children and family.

    ReplyDelete
  9. Good to see your poem and US Eperience sir 🙏 👍

    ReplyDelete
  10. 👍🏻👍🏻👏🏽👏🏽 Nature is bountiful.
    You have made it beautiful by your கவிதை!
    We will also be travelling to Atlanta, US after 4 years, next month end!
    Have a great time.

    ReplyDelete
    Replies
    1. Unable to know from whom this message has come! It shows "From Anonymous".Can you mention your name in the message?

      Delete
  11. Wish you a nice stay, Ramesh . Enjoy the beauty of Nature and God’s wonderful creation !
    Ramani.

    ReplyDelete
  12. Very nicely brought out about the bountiful being enjoyed by you. The lines about the deers and the squirrels bring memories of our own experience in our daughter;s house in UTAH. Have a great stay in the US. hope atleast after your return you will keep up the promise of visiting us. Cheers

    ReplyDelete
    Replies
    1. Unable to know from whom this message has come! It shows "From Anonymous".Can you mention your name in the message?

      Delete
  13. Excellent! Have a great time with your son & family!

    ReplyDelete