பிரதோஷப் பாடல் - 45
இந்த மாதம் 29-ம் தேதி பிரதோஷ தினத்தன்று எழுதிப் பதிக்க மறந்த பாடல் இது.
கிட்டத்தட்ட மூன்று மாத இடை வெளிக்குப் பின் ஒரு பாடலை இயற்றிப் பதிவு செய்கின்றேன் .
அன்புடன்
ரமேஷ்
அர்த்தநாரீஸ்வரர்
அம்புலியைத் தன்சிரத்தி லேவைத்த ஈசனை
அம்பலத்தில் நடமாடும் நீள்சடைக் கேசனை
அம்பிகைக்கு தன்னுடலில் பங்களித்த தேசனை
அம்பைய்த காமனை எரித்தகை லாசனை
நம்பியே மனதிருத்தி செய்திடுவோம் பூசனை!