வீணாய்ப் போன வருடங்கள்
2020 , 2021 - இரண்டு ஆண்டுகளும் கொரானா-வுக்கு பயந்தே கழிந்தன.
2022 லும் இந்நிலை தொடரும் போலவே தெரிகிறதே!
மனித சமுதாயத்திற்கு விடிவு காலம் எப்போது?
வருத்தத்துடன்
ரமேஷ்
வீணாய்ப் போன வருடங்கள்
இருபத் திருபதும்* இருபத் தொன்றும்** வீணாய்ப் போன வருடங்கள் *2020 **2021
சிறுநுண் மிதனின் சீற்றத் தாலே திருடப் பட்ட தருணங்கள்
இன்றோ நாளையோ நீங்கிடும் என்று எதிர்பார்த் திருந்த நாழிகைகள்
நன்றே நடக்கும் நாளை என்று நம்பிக் கடந்த நாட்துளிகள்
வானினை நோக்கி வரங்கள் வேண்டி துதித்துக் கழித்த வாரங்கள்
தீனுண் மியுடைய தாக்கம் தீருமென் றெதிர்பாத்த திருந்த மாதங்கள்
இருபத் திருபதும் இருபத் தொன்றும் வீணாய்ப் போன வருடங்கள்
சிறுநுண் மிதனின் சீற்றத் தாலே திருடப் பட்ட தருணங்கள்
வருடம் இரண்டை வாழ்க்கையி லிருந்து வாரிக் கொடுத்து விட்ட பின்னும்
பொறுமை காத்துப் பொறுமை காத்து பல்லுயிர்ப் பெருவிலை தந்தபின்னும்
தூமக் கோளொன்று வானினை விடுத்து பூமியின் மீது விழுந்ததுபோல்
வாமனக் கிருமி வேறோர் வடிவில் ஓமிக் ரானாய் வருகிறதே! - இதன்
ரௌத்திரம் சற்றும் குறையா திருந்து வருத்திடும் வருடங்கள் தொடர்ந்திடுமோ
சரித்திரம் மீண்டும் இருபத் திரண்டில் மற்றோர் முறையாய்த் திரும்பிடுமோ?