Search This Blog

Jan 17, 2021

கடலோரக் காட்சி

 கடலோரக் காட்சி 

பல மாதங்களுக்குப் பிறகு சென்னை மெரீனா கடற்கரைக்குச் சென்றோம்.  இதற்கு முக்கிய காரணம் பெங்களூரிலிருந்து சென்னை வந்திருக்கும் எங்கள் அன்புப் பேத்தி ஆதிரா! கடற்கரைக்குப் போயே தீரவேண்டும் என்று பிடிவாதம்!

அதிகாலையில் கூட்டம் கூடும் முன்பாக அங்கு கழித்த சில மணி நேரங்கள் சொர்க்கம்தான்!

முகமூடியைக் கழற்றிவிட்டு, சில்லென்ற காற்றின் ஸ்பரிசத்தில் நடக்கும் சுகமே தனி ! கூடவே கைகோர்த்து நடக்க பேத்தியும் இருந்ததால் ஆனந்தம் இரண்டு மடங்கு!

இந்த அனுபவத்தைப் பற்றி ஒரு கவிதை, இதோ!

அன்புடன் 

ரமேஷ்  

கடலோரக் காட்சி 





கடலலைகள் கரை தடவும் ; அலைமுடியில் நுரை மகுடம்;

உடல் தழுவும் குளிர் காற்று; இளம் சூட்டில் கதிர் கீற்று .

முகில் தூவும் சிறுதூறல் ; துகில் நனைக்கும் மழைச்  சாரல்;

முகம் சேரும்  மழைத் துளிகள் சுகம் சேர்க்கும்; அகம் மகிழும்!


கரையோரம் நிற்கையிலே சிற்றலைகள் கால்வருடும்.

விரைந்துவரும் பேரலைகள் துரத்திநம்மை ஓடவிடும் .

திரும்பிக்கடல் செல்கையிலே காலடியில் குழிபறிக்கும்.

குறுமணலின் உரசலிலே உள்ளங்கால் குறுகுறுக்கும்!


தூரத்துத் தொடுவானச் சூரியனைப் பார்த்தபடி, 

இளங்கதிரின் சூட்டினிலே உடல்சிறிது வேர்த்தபடி,

பெயர்த்தியுடன் விரல்களையே கைசேர்த்துக் கோர்த்தபடி, 

நடக்கையிலே பார்த்திருக்கும் கடலதையே  ஆர்த்தபடி!


ஈரமணல்  பரப்பினிலே காலடிகள் தடம்பதிக்கும் 

மீண்டும்மீண்டும் கால்வருட வருமலைகள் அடம்பிடிக்கும்.

இவ்வியற்கைக் காட்சியையென் கண்களுமே படம்பிடிக்கும் 

என்மனதில் இந்நினைவுகள் நீங்காமல் இடம்பிடிக்கும்!






14 comments:

  1. Super. You have brought the early morning aunty of the marina beach in front of our eyes 👍

    ReplyDelete
  2. Sorry it should be sunrise and not aunty.

    ReplyDelete
  3. அருமை . அன்பு பேத்தி வரவால் உதயமானது நல்ல கவிதை .

    ReplyDelete
  4. Excellent. Should I thank you or your grand daughter

    ReplyDelete
  5. Your poems are becoming more and more super. This one is more so with your reading,
    Affly
    Sunder

    ReplyDelete
  6. Hi Ramesh, உணர்ச்சிகளின் அலைகள் . மிகவும் ரசித்தேன் , நன்றி . பொதுவாக Reva இந்த பக்கங்களை படிப்பதில்லை. இதை படித்தபின் அவள் சொன்ன கருத்தை இங்கு பதிப்பித்துள்ளேன் . " நானே கடற்கரையில் நடந்ததுபோல் இருந்தது."

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. V. Nice and true I remember the days I spent with Utthara .Golden days

      Delete
  8. Very nice Ramesh. When we were working together, neverknew you were such an accomplished tamil scholar. Pramadham.

    ReplyDelete
  9. பேரப் பிள்ளைகள் பேரானந்தம் என்பது கூற்று.தங்கள் கவிதையில் அன்பு அலை மோதுகிறது.வாழ்த்துக்கள்.
    ராம்கி
    சப் நல்ல

    ReplyDelete
  10. பேத்தியுடன் கைகோர்த்து நடப்பது ஆனந்தமே கடற்கரையில் நடப்பது பேரானந்தம். ஆனந்தத்தில் பிறந்த கவிதை அற்புதம்.

    ReplyDelete
  11. Enjoyed watching the scene and the beautiful poem .
    K S Venkiteswaran

    ReplyDelete
  12. அருமையான கவிதை,ரமேஷ்.👌👌👌

    ReplyDelete