அழையா விருந்தினர்?
இவர்கள் அழையா விருந்தினராக ஆகிவிட்டார்கள்!
மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி!
இதுபற்றி இரண்டு பாடல்கள்!
புலம் பெயர்ந்த தொழிலார்கள் புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டுக்கு செல்லதற்கு படும்
பாட்டைப் பற்றி எழுதாத ஏடில்லை, உரைக்காத ஊடகமில்லை பதைக்காத மனமில்லை.
ஒரு வழியாக நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது என்று நாம் நினைக்கையில்
அதன் மற்றொரு பரிமாணம் விரியத் தொடங்கியிருக்கிறது.
பாட்டைப் பற்றி எழுதாத ஏடில்லை, உரைக்காத ஊடகமில்லை பதைக்காத மனமில்லை.
ஒரு வழியாக நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது என்று நாம் நினைக்கையில்
அதன் மற்றொரு பரிமாணம் விரியத் தொடங்கியிருக்கிறது.
ஊர் திரும்பும் இவர்கள் ,ஊராருக்கு நோயைக் கொடுக்கக் கூடும் என்ற அச்சத்தால்,
ஊர்மக்கள் இவர்களை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்ற செய்திகளைக் கேட்கிறோம்!
ஊர்மக்கள் இவர்களை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்ற செய்திகளைக் கேட்கிறோம்!
இவர்கள் அழையா விருந்தினராக ஆகிவிட்டார்கள்!
மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி!
இதுபற்றி இரண்டு பாடல்கள்!
அன்புடன்
ரமேஷ்
அழையா விருந்தினர்?
வேலைதேடி வீடுவிட்டு வேறு இடம் சென்றவர்கள்
சாலைவழி நெடுந்தூரம் நடந்து வந்து ஊர்சேர்ந்து
பாலையிலே ஊருணியைப் பார்த்தவர்போல் மனமகிழ்ந்தார்!
மாலையிட்டு மலர்தூவி வரவேற்பார் என்ற அவர்
எண்ணத்திலே மண்தூவி ஊராரும் உறவினரும்
"மண்ணுடைய மைந்தன்தான் என்றாலும் உன்னுடன்நீ
கொண்டு வந்த கொடுநோய்க்கு அனைவருமே அஞ்சுவதால்
கொண்டு வந்த கொடுநோய்க்கு அனைவருமே அஞ்சுவதால்
வரவேண்டாம் உள்ளே நீ ! வெளியே போ! போய்விடெ"னெ
விரட்டித் துரத்துவதால் திரிசங்காய்த்* தொங்குகிறார்.
* தன்னுடைய மானுட உடலோடு சொர்க்கத்தை அடைய விரும்பிய திரிசங்கு , விஸ்வாமித்ர
முனிவரை நாட,அவரும் ஒரு யாகம் செய்து அவனை இந்திரலோகத்திற்கு அனுப்புகிறார்.
ஆனால் மானிட உடலோடு வரும் திரிசங்குவை இந்திரன் உள்ளே அனுமதிக்காததால் கீழே
விழும் திரிசங்குவை நடுவானத்தில் தடுத்து நிறுத்திகிறார் விஸ்வாமித்திரர்.
இங்கும் இல்லாமல், அங்குமில்லாமல் நடுவிலே தொங்கி அவதிப்பட்டான் திரிசங்கு!
இதுதான் அந்த புலம்பெயர்ந்தோரின் நிலைமை!
( பின்பு அதே இடத்தில் முனிவர் அவனுக்கு ஒரு தனி சொர்க்கம் அமைத்து , அதிலே திரிசங்கு
தலைகீழாகத் தொங்குகிறான் என்பது புராணம்!)

இதே கருத்தை உட்கொண்ட ஒரு பலவிகற்ப இன்னிசை வெண்பா !
பொருளீட்ட மாநகரைத் தேடியே ஒடினோர்
திரும்ப வருகின்ற வேளையிலே வந்தவரை
வேண்டா விருந்தெனவே வீட்டோர் விரட்டுவதால்
தொங்குகிறார் அந்தரத்தில் இன்று .
வேண்டா விருந்தெனவே வீட்டோர் விரட்டுவதால்
தொங்குகிறார் அந்தரத்தில் இன்று .
The second verse similar to “ Trisangu’s status, is very crisp and delightful to read !
ReplyDeleteWho’s going to be the saviour for these people?
Both your poems are very apt depicting current Situation!
Enjoyed the timely verses ! Highly creative !
Very well written Ramesh. It clearly depicts the situation of these unfortunate people. It is really a shame for our country.I had recently gone to help a cady from my golf course giving him money and provisions.He is from UP and when I asked him why he hasn't decided to go back to his village,he said what willI do going back. One smart fellow amongst a few.
ReplyDelete👏👏A great description of the plight of the unfortunate labourers Trishanku is the apt comparison 👌👌
ReplyDeleteIt is not only an economic issue but also a social issue. Governments and NGOs have a role to play.
ReplyDeleteLovely Ramesh. The plight of the migrants is very correctly captured. They have become unwanted in their own place. Very sad!
ReplyDelete