Search This Blog

Mar 21, 2019

பேத்திகள் -

இன்று எனது மூன்றாவது பேத்தி ஆதிராவின் பிறந்த நாள்!
அதைக்  கொண்டாடும் விதமாக , வெகு நாட்களாக விடுபட்டிருந்த என் பதிவை மீண்டும் புதுப்பிக்கிறேன்!
அன்புடன் 
ரமேஷ் 
கனித்தோட்டம் 


பேத்திகள் 

பேத்திகள் -

ஓடுதலிலும் தேடுதலிலுமே  காலம் கழிந்ததால்
மகனிடமும் மகளிடமும் காட்ட மறந்து
மனதில் அணை கட்டித்
தேக்கி வைத்திருந்தஅன்பு ஊற்றுகளின்
வடிகாலாக விளங்கும்
பாத்திகள்

பேத்திகள்-

வையகத்தின் மொத்த அழகையும்
கையகப்படுத்தி , 
அதனைத் தம்
அழகுமுகச்  சிரிப்பிலும்
உதிர்மழலைச் சொல்லிலும்
சேர்த்து வைத்திருக்கும்
நேர்த்திகள்

தாத்தாக்களுக்கு 
அவை  தரும் ஆனந்தத்தைக்
கூற உண்டோ  
வார்த்தைகள்?



  

6 comments:

  1. As one grandfather to another, totally agree with your sentiments. Was wondering why you went offline for a couple of months.

    ReplyDelete
  2. பேத்திகளிடம் ஆனந்தமாக தில்லியில்(இன்று ஹோலி விடுமுறை) இருக்கும் பொழுது வந்த அருமையானதொரு கவிதை.

    ReplyDelete
  3. I am in TOTAL AGREEMENT with Mr. S. Ranganathan.
    Regards
    Sunder

    ReplyDelete
  4. வார்த்தைகளால் அளக்கமுடியாத ஆனந்தம் அது . எங்கள் வாழ்த்துக்கள் உன் பேத்திகளுக்கு

    ReplyDelete
  5. சிறப்பு. உங்களின் பேத்திகளுக்கு எம் வாழ்த்து.

    ReplyDelete