திருவிளையாடல் பாடல்கள் -2
திருவிளையாடல் புராணம் பற்றி நான்கு வரிக் கவிதைகளை சில வாரங்கள் முன்பு தொடங்கி இந்திரன் பழி தீர்த்த படலம், மீனாட்சி கல்யாணப் படலம் என்ற இரு படலங்களைப் பற்றிக் கூறியிருந்தேன்.
மீனாட்சி தாயின் கலயாணத் திருக்கோலத்தைக் காணும் அவசரத்தில் இதற்கு முந்தைய சில படலங்களை மறந்துவிட்டேன்!
அவை _
1. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்.
2. திருநகரம் கண்ட படலம்.
3. தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்.
இவைகளை இன்று தொடங்கி வரும் வாரங்களில் பதிக்க இருக்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்
2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்.
தில்லை நாயகன் தரித்த பத்மத்தை
----------- துருவா சருமோர் நாள்
வெள்ளைக் கரிமேல் வந்த இந்திரற்
----------- கன்போ டளிக்க அதையே
தள்ளி மிதித்துத் தெறுமொழி பெற்ற
களிறும் கடம்பி னடியில்
உள்ள பரமனை நன்னீ ராட்டி
உய்த துரைத்தே னிங்கு
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
பத்மம்=தாமரை மலர்

தெறுமொழி = சாபம்
கரி,களிறு = யானை
கடம்பு= கடம்ப மரம்; சிவபெருமானுக்கு உகந்தது
நன்னீ ராட்டி = அபிஷேகம் செய்து
உய்தல் = ஈடேறுதல்
பாடற்பொருள் :
The story in English:
The story in Tamil:
துர்வாச முனிவர் ஒரு சிவலிங்கம் அமைத்து அதற்கு அனுதினமும் பூசைகள் செய்து வந்தார். அவர் செய்த பூஜைகளால் மகிழ்ந்த சிவபெருமான் அவர் அணிந்திருந்த ஒரு தெய்வீகத் தாமரை மலரை அவருக்கு அளித்தார். அந்த மலரைக் கையில் ஏந்தி , முனிவர் இந்திரலோகம் சென்றார். அப்போது , தேவேந்த்திரன், அரக்கர்களுடன் போரிட்டு வென்று தன்னுடைய வெள்ளை யானை மீது ஏறி வெற்றி ஊர்வலம் வந்துகொண்டிருந்தான். அவனை வரவேற்கத் திரண்டிருந்த அனைவரும் அவனுக்கு விலையுயர்ந்த பல பரிசுப்பொருட்களை அளித்து, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
பாடற்பொருள் :
துர்வாச முனிவர் பூசைப்பயனாக சிவபிரானிடம் பெற்ற ஒரு தெய்வீகத்த தாமரைப் பூவை ஐராவதம் என்ற தன் வெண்யானையின் மேலேறி வந்து கொண்டிருந்த இந்திரனுக்கு அளிக்க, அவனும் அதை பெற்று யானையின் மேல் வைத்தான். அந்த யானை அப்பூவைக் கீழே தள்ளி மித்தித்துவிட்டது. இதனால் கோபமடைந்த துர்வாசர் அளித்த சாபத்தால் பீடிக்கப்பட்டு தேய்வது தன்மையை இழந்து காட்டு யானையாக பூலோகத்தில் வசித்த ஐராவதம் , கடம்பமரத்தடியில் இருக்கும் ஈசனை வழிபட்டு மீண்டும் பொலிவுற்றது.
The story in Tamil:
துர்வாச முனிவர் ஒரு சிவலிங்கம் அமைத்து அதற்கு அனுதினமும் பூசைகள் செய்து வந்தார். அவர் செய்த பூஜைகளால் மகிழ்ந்த சிவபெருமான் அவர் அணிந்திருந்த ஒரு தெய்வீகத் தாமரை மலரை அவருக்கு அளித்தார். அந்த மலரைக் கையில் ஏந்தி , முனிவர் இந்திரலோகம் சென்றார். அப்போது , தேவேந்த்திரன், அரக்கர்களுடன் போரிட்டு வென்று தன்னுடைய வெள்ளை யானை மீது ஏறி வெற்றி ஊர்வலம் வந்துகொண்டிருந்தான். அவனை வரவேற்கத் திரண்டிருந்த அனைவரும் அவனுக்கு விலையுயர்ந்த பல பரிசுப்பொருட்களை அளித்து, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
துர்வாசரும் , இந்திரனை வாழ்த்தி, அரண் அளித்த தெய்வீகத் தாமரை மலரை அவனுக்கு அளித்தார். வெற்றிக்கு களிப்பில் மிதந்துகொண்டிருந்த இந்திரன், அதை பெற்ற தன்னுடைய யானையின் மேல் வைத்தான். அந்த வெள்ளையானையோ அந்தத் தாமரை மலரை கீழே தள்ளி காலால் மிதித்து விட்டது. இதைக் கண்டு சினமடைந்த துர்வாச முனிவர், இந்திரனையும், யானையையும் சபித்தார். அந்த சாபத்தால் வெள்ளை யானை தன தெய்வீகத்த தன்மையை இழந்து காட்டு யானையாக மாறி, நூறு ஆண்டுக் காலம் பூலோகத்தில் வசிக்கலாயிற்று. நூறு ஆண்டுகள் முடிந்த நிலையில், கடம்ப வனத்தில் நுழைந்த யானை, அங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராட, மீண்டும் நல்லுருப் பெற்றது. சாப விமோசனம் அடைந்த யானை, கடம்பவனத்தில் இருக்கும் சிவலிங்கத்திற்கு பொற்றாமரைக்குள நீரினால் அபிஷேகம் செய்து , சிவனருள் பெற்று மீண்டும் இந்திரலோகம் அடைந்தது.
The story in English :
The Great Sage Dhurvaasa had been devoutly performing daily pooja to a Sivalingam . The Lord, pleased with his devotion, gave him a Divine Lotus Flower, which was adorning him . The sage went to Indra Loka with the flower when he saw Indra, the King of the Devas ,who was returning to his abode, seated on his White elephant, after having vanquished the mighty Asuras in a war. People had gathered to welcome him and were offering him various costly gifts, in appreciation of his achievement. The sage also conveyed his blessings to Indra and presented him with the Divine Lotus Flower, given to him by Lord Siva. Indra, after receiving the flower , casually placed it on the elephant without paying much attention to it. The elephant carelessly threw the flower down and trampled on it. On seeing this act, the sage was enraged and cursed both the elephant and Indra. As a result, the white elephant lost its divinity and had to spent a hundred years on earth as a wild elephant. On completion of the ordained hundred year period, the elephant entered the Kadamba forest and took a dip in the Lotus pond there, wherupon, it regained its original form and colour. It performed Abhishekam to the Sivalingam there , with water from the Lotus Pond and after receiving the blessings of Lord Siva, returned to Indra Lokam.
No comments:
Post a Comment