Search This Blog

Jul 26, 2016

சென்- ( ZEN )

சென்- ( ZEN )

ZEN ( சென் )என்பது என்ன?

அது ஒரு வகையான புரிதல் ! புரிந்தபின் அதன் மூலம் வாழ்க்கையை அறிதல் !

உலகிலுள்ள எல்லாப் பொருள்களிலும் - அசையும் பொருள், அசையாப் பொருள் இவை அனைத்திலும்  -  உள்நின்று ஒளிர்வது ஒன்றே என்று உணர்தலே ZEN.  (சென் )

அத்வைத தத்துவத்தின் ஒரு அவதாரம் என்றே இதைக் கருதலாம் என்று எண்ணுகிறேன்.

இந்தத் தத்துவம், தென்னிந்தியாவிலிருந்து புறப்பட்டு சீனா வழியாக ஜப்பான் சென்று இந்த வடிவை எடுத்திருக்கிறது.

இது பற்றி எனக்குத் தெரிந்தது , ஒரு புதுக் கவிதை வடிவில்.

அன்புடன்

ரமேஷ்


தவழும்  தென்றல் ,இலைகளின்  மணங்கள்
பறவையின் கூக்கு - சென்
சுற்றிலும் இரைச்சல் சூழ்ந்திருக் கையில்
மனத்துள் மௌனம் - சென்

எரியும் கனல் , தீக்குள் விரல்  
தீண்டுதல் இன்பம் - சென்
சொற்களின்  சிலம்பம்  , வார்த்தையின் கதம்பக் 
கவிதையுள் கருப்பொருள் - சென்.    

அலைகளின் சலனம், ஆழ்கடல்  மௌனம் 
இதுவும் அதுவும்   சென் -  நீர்
நிறைந்த கோப்பை , குறைந்த கோப்பை
இரண்டும் ஒன்றே - சென். 

வேண்டு மனைத்தும் உன்னிடம் உண்டு
என்று உணர்தல் - சென்
உன்னை நிறைக்கும் உட்பொருள் ஒன்றே
உள்ளிலும் வெளியிலும் - சென்


நேற்றை மறந்து நாளையைத் துறந்து
இன்றில் இருப்பது சென்.
பிரபஞ்சப் பெருக்கின் போக்கில் துகளாய்
மிதந்து மகிழல் -சென்

3 comments:

  1. நம்ம கடாகாச தத்வத்தின் simplified formதான் zen!

    ReplyDelete
  2. நம்ம கடாகாச தத்வத்தின் simplified formதான் zen!

    ReplyDelete