Search This Blog

Feb 13, 2016

முருகனின் அறுபடை வீடுகள்

கனித்தோட்டம் ( கனவுகள் நினைவுகள் கவிதைகள் நிகழ்வுகள்) என்ற இந்த பதிப்பை நான் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு   மாதங்கள் ஆகி விட்டன. இதுவரை 49 பதிவுகள் முடிந்து , இது 50- வது பதிப்பு. இவற்றில்  90 விழுக்காட்டுக்கு மேல் கவிதைப் பதிப்புகள்.

தொடங்கும்போது , இந்த மைல்கல்லை  எட்டுவேன் என்று நான் நினைக்கவில்லை - அதுவும் இவ்வளவு சீக்கிரம் !

பதிவுகளைத் தவறாமல் படித்து வரும் நண்பர்கள், உறவினர்கள், தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.  தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் பார்கிறேன்.

நான் பதிவு செய்த முதல் கவிதை முதல் கவிதை விநாயகர் துதி.
இப்போது 50 -வது பதிப்பாக முருகனின் அறுபடை வீடுகள் பற்றிய கவிதை. 
ஒவ்வொரு படைவீட்டைப் பற்றிய கவிதையை அடுத்து, அக்கவிதை கூறும் கருப்பொருள் பற்றி ஒரு சிறிய ஆங்கிலச் சுருக்கமும் தந்திருக்கிறேன்.

முருகன் அருள்  அனைவருக்கும் கிட்டுவதாகுக!

அன்புடன்

ரமேஷ்


 முருகனின் அறுபடை வீடுகள்

முருகன் அவதரித்தல்

முக்கண்   முதல்வனின்   நெற்றிக்கண்   ஜோதியின்

சக்தியால்   உண்டா    னவா  -   மொக்கவிழ்

பூவிரித்   தாமரைப்   பூப்படுகை   மீதிலே

மூவிரு   குழந்தைவடி   வில்.


கார்த்திகைக்   கன்னியர்கள்   காத்தஅறு   மழலைகளை

சேர்த்தன்னை   உமைஅணைக்     கையில் -   ஓருடலாய்

இணைந்தாறு   முகத்தோனாய்   பன்னிரு   புஜத்தோனாய்

எண்ணரும்   எழில்   கா ட்டினாய் .

 The Birth of Lord Muruga
The above two stanzas are about the birth of Lord Arumuga – how the jyothi from Lord Siva’s third eye gave birth to six children who were brought up by the six Karthigai kannigal as separate children before Parvathi Devi’s embrace made them into one with Six heads and twelve arms- Aru Mugan

பழனிமலை

முந்தியே   உலகினை   வலம்செய்து   வந்திடினும்

தொந்தியான்  பழம் பெற்றதால்நொந்துபோய்

தாய்தந்தை   யைத்துறந்து   கைலயந்தனை  விடுத்து

கோவணத்   தாண்டியுரு   வில்


ஆவினன்   குடிமேவி    இடும்பனங்    கிருத்திட்ட

சிவகிரிக்   குன்றி   லமர்ந்தாய் -    சிவஞானப்

பழம்நீ  யேயெனச்     சிவனாரே   அருளியது

பழனிமலை   என்றான  தே!

PALANI MALAI
After being denied the Divine fruit by his parents, which went to his brother, the pot bellied Ganapathy, Murugan came to Avinan Kudi in a huff and sat on the top of the mountain Sivagiri , which was being brought to the south by Idumban, under the  orders of Saint Agasthya.  Lord Siva came to mollify Muruga and told him that he (Muruga) himself is the Fruit of Wisdom-(ஞானப் பழம் நீ).   This mountain,came to be known as Palani Malai after that.

 சாமிமலை

 பிரணவத்தின்    தத்துவத்தை    சரியாக    அறியாத

பிரம்மனின்   ஒருசிரத்    தினை -   அரிந்திட்டு

சினங்கொண்டு    சிறையிட்டு    விடுதலைபின்     செய்தனை

அனைவரும்    முறையிட்ட     தால்.

ஓமெனும்    பிரணவத்தின்    உட்பொருளை    உணர்ந்ததனை

காமனை    எரித்த    சிவர்க்கே -    சாமிமலை

குன்றிலே    மன்றுபட*    உபதேசம்    செய்தங்கு

என்றும் உறை    எழில்முருக    னே!

           * ( மன்றுபட=தெள்ளிவாகப் புரியும் படி )

SWAMI MALAI
 These stanzas refer to the legends in which
A)     Not satisfied with Brahma’s explanation of the Pranava Manthiram, Muruga took off one of the five heads of Brahma and imprisoned him , and B )  Muruga explained the inner meaning of Ohm to his father, Lord Siva himself at this place, and gained the sobriquet of Swaminathan.

திருச்செந்தூர்

 பார்வதி    தேவியிடம்    வேல்பெற்று   சூரனை

இருபாதி    யாகப்  பிளந்துஒருபாதியை

கொக்கருகோ *   எனக்கூவி    அறியாமைத் துயில்  கலைக்கும்

குக்குடக்**   கொடியாக   வும்

மற்றுமொரு    பாதியை    திக்கெட்டு    திசையெங்கும்

சுற்றிவரும்    மயிலாக    வும்-    ஏற்றருளி

கடலாடும்    கரையோரச்    செந்தூரில்   குடிகொண்டாய்  

சுடலாடி***   பெற்றமக  னே !

              

                    *  கொக்கருகோ =கொக்கு+அறு + கோ

                                                     ="கொக்கு வடிவில் வந்த அரக்கனைக்

                                                        கொன்றவனே"

                     ** குக்குடம் = சேவல்  *** சுடலாடி -- மயானத்தில் ஆடுபவன்

THIRUCHENDUR
 Muruga vanquished Surapadman (Suran ), using the Vel , blessed and given to him by Parvathi. Suran, in a bid to escape,  took the shape of tree which Muruga split into two. Based on a request by the repentant Suran, he converted one half into his Seval(cock) Flag and the other half into a Peacock which he used for ambulating.

திருப்பரங் குன்றம்

 அரக்கரால்  சிறைப்பட்ட  புலவன்   நக்கீரன்திரு

முருகாற்றுப்   படைபா   டியே -- முறையிட்ட

உடன்வந்து    சிறைமீட்டு   உயிர்காத்து    உய்வித்த 

இடமான    பரங்குன்றி   லே

முக்கண்ணன்    திருமாலன்    நான்முகனும்    முப்பத்து

முக்கோடி    தேவர்   களும்-   வாழ்த்துரைக்க

தேவர்கோன்   திருமகள்    தேவானையை மணந்த

தேவர்படைத்    தானைத்    தலைவா

- THIUPPARANKUNRAM
 Legend has it that Poet Nakkeeran, who was imprisoned in a cave at this mountain by Asuras , prayed to Muruga, composing Thirumurugaatruppadai . Hearing this Muruga came and saved Nakkeeran.
This is also the place where Muruga married Devayanai, the daughter of Indra. This marriage was blessed by the presence of the Mummoorthis and the Devas. Hence this  place is also known as Then Imayam( South Himalaya)

பழமுதிர் சோலை

 சுட்டபழம்  வேண்டுமா    சுடாதபழ  மாவென

கேட்டவ்வைப்    பாட்டி    யிடமே -   பாட்டெழுதும்

நாவல்லி    யாமவளை    நாவிலி   யாய்ச் செய்து

நாவல்பழ    முதிர்சோலை   யில்

தேவியர்   இருவருடன்    வண்ணமயில்    வாகனத்தில்

சேவற்கோடி   யடியில்    அமர்ந்து -    சேவிக்க

வந்தங்கு   கூடிடும்    அடியவர்க்    கருளினைத் 

தந்திடும்   கந்தவே   ளே!

PAZHAMUDHIR SOLAI
The first stanza refers to the story in which Murugan took the form of a small shepherd boy to make fun of Poet Avvaiyar, and also to strike a small blow to her ego!
This place is also where Muruga gives darshan with both his consorts.

 திருத்தணி

அசுரரொடு   போர்முடித்த   உக்கிரம்    தணிய *இம் 

மசலமீ    திளைப்பா   ரியே -   பாசமுடன்

பணிவோரின்     துயரெலாம்    தணித்திடும்    சிறப்பின்திருத்

தணிகையெனும்      படைவீட்டி   லே 

வனநிலத்தில்   தினைகாக்கும்   வள்ளிக்   குறமகளை

நினைத்து   மனம்   மணமுடிக்கவே -   பனித்தமுடி

விருத்தனாய்    உருவெடுத்து    வேழமுகன்   உதவியுடன்

 திருமணம்   செய்தமுரு   கே!.


                          * இம்மசலம்= இந்த அசலம் =இந்த மலை
                

THIRUTHANI
After battling the demons and destroying them, Muruga, who was in a fierce mood , came to Thiruthanni where he cooled off. “Thanitthal “ means “reduction”. Hence the name Thiruthani.

In order to woo Valli, who was guarding the fields,Muruga sought the helpofhis brother, Vinayaga. Muruga took the form of an elderly man and approached Valli for her hand. He was duly rebuffed by Valli, whereupon , at his request, Vinayahga took the form of a wild elephant and appeared there. The frightened Valli embraced Muruga who transformed into his true form and  took the hand of a delighted Valli.
















2 comments:

  1. Good one. உமது கவித்துவம் மேலும சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள மூர்த்தி, , தங்கள் பகிர்வுக்கும் பாராட்டுக்கும் நன்றி.
      முருகர் பற்றிய இன்னொரு பாடல் நேற்று ( 24-2-16 ) பதிப்பித்திருக்கிறேன்.
      ரமேஷ்.

      Delete