Search This Blog

Sep 28, 2015

கொசுவின் பாட்டு


 சென்னையிலே இப்போது கொசுத் தொல்லை அவ்வளவாக இல்லை - இன்னும் மழை ஆரம்பிக்காததால்! ஆனால் டெங்கு வியாதி பற்றி பரபரப்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில்,    சில மாதங்களுக்கு முன் கொசுத் தொல்லையைப் பற்றி நான் எழுதிய ஒரு பாட்டு , பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. தூசி தட்டி எடுக்கப்பட்ட அந்தப் பாடு இதோ !
படித்து முடித்தபின்,  "சரியான  கடி "என்று சொல்லுகிறீர்களா?
அதுவும் சரிதான் ! கொசுவைப் பற்றிய பாட்டு பிறகு எப்படி இருக்கும்?
அன்புடன் 
ரமேஷ் 
 

கொசுவின் பாட்டு


 கொசுவின் பாட்டு நாள்தோரும்    கேட்குது இரவில் காதோரம்
இசைக்கும் அந்த ரீங்காரம்    எழுப்புது ஆத்திர ஆங்காரம்.
சிசுவில் தொடங்கி சிறுவருடன்    சீனியர் சிடிசன் அனைவரையும்
சோச லிஸ்டாம்   இக்கொசுக்கள்    சமமாய்க் கடித்துக் குதறிடுமே.

மாநக ராட்சியின் புகைவண்டி    போடும் பெரும்புகை என்றாலும்
சேனையை ஒத்த கொசுக்கூட்டம்    சேதம் ஏதும் அடைவதில்லை
படுக்கப் போகும் நேரத்தில்     படையாய் வந்து சூழ்ந்திடுதே .
ஓடோ மாசைப்*  போட்டாலும்     ஓடிப் போக மாட்டாவே
 

 "நல்லிரவுத்**"  திரவ குப்பிகளை.    நாலைந் திடத்தில் வைத்தாலும்
நள்ளிரவில்  சுள்சுள் ளென்று    நன்றாய்க் கடித்தெனை எழுப்பிடுதே
மின்சா ரம்பாய் மட்டைதனை   வீசிக் கொசுபல கொன்றாலும்
மீண்டும் மீண்டும் வந்திடுதே    மீளாத் துயரைத் தந்திடுதே.
 
என்ரத்தம் தினமும் சேதாரம்    அக்கொசுவுக் கதுவே ஆதாரம்
இந்நிலைமை  என்று மாறிடுமோ?    வழிகள் உரைப்பீர் ஏதேனும்.!
இதுதான் வழி!
பரண்மேல் இருக்கும்  பழங்கால    வலையைத் தேடி எடுத்திடுக.
அரண்போல் கட்டி அதனுள்ளே   ஒயிலாய்ப் படுத்தே துயில்கொள்க.  
 

 
 

* ODOMOS        
 

** GOOD KNIGHT      

 

No comments:

Post a Comment