Search This Blog

Sep 4, 2025

அமைதிப் பள்ளத்தாக்கில்....

அமைதிப் பள்ளத்தாக்கில்......


"அமைதிப் பள்ளத்தாக்கில்" அமர்ந்து எழுதிய ஒரு பாடல்! 

அன்புடன் 

ரமேஷ்.



எண்ணக் குவியல்களின் இரைச்சல்களைத் துறந்து 

அண்ட வெளிபரப்பின்  ஆழத்திற் குள்பறந்து 

அமைதிப்  பள்ளத்தாக்கில்    தனியாகவே    அமர்ந்து  

இமைமூடி எண்ணத்தின்  சுமையிறக்கி சுவாசிக்கிறேன்


மவுனமெனும் மொழியில்நான் எழுதியபல  கவிதைகளையென் 

செவிமட்டும் கேட்டுணர ரகசியமாய் வாசிக்கிறேன்

இயற்கையின் இடையமர்ந்து  மோனநிலை மடியமர்ந்து 

தனிமைதரும் இனிமையினை  நானுணர்ந்து  நேசிக்கிறேன் 

  

கண்மூடித்  தவமிருந்து என்னையே  நான்திறந்து 

இப்பிறவியின் காரணமே  என்னவென யோசிக்கிறேன்

ஒளிவளிவெளி நிலம்நீரை  எண்ணற்ற உயிரினத்தை 

படைத்தும் காத்தும் அழிக்கும் இறைவனைநான் பூசிக்கிறேன் 


என்னுள்ளே யேயிறைவன் இருக்கின்றான் என்றாலோ  

கண்டுணரும் வரத்தையவன்  வழங்கிடவே யாசிக்கிறேன்


அன்புடன்

ரமேஷ் 



  




முத்தமிட முகில்தொட்டு நீண்டுயர்ந்த மலைநடுவில் 

சத்தங்கள்  என்றென்றும் சேராத தானதொரு