பூரி ஜகன்னாதர்
சென்ற மாதம் 50 PLUS VOYAGERS என்ற நிறுவனத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சுற்றுலாப் பயணத்தில் நானும் என் மனைவியும் பங்கேற்றோம். ஆறு நாட்கள் பயணித்து ஒரிசா மாநிலத்தின் பல இடங்களுக்குச் சென்றோம். இவற்றில் ஒன்று புகழ் பெற்ற பூரி ஜகந்நாதர் கோயில்.
சாதாரணமாக எல்லா கோவில்களிலும், கடவுளர்கள் தத்தம் மனைவியருடனே சேர்ந்திருந்து அருள்பாலிப்பதையே ( சிவன்-பார்வதி, விஷ்ணு-லட்சுமி, முருகன்-வள்ளி,தெய்வானை ) பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தக்கோவிலிலே ஒரு வித்தியாசமாக மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் தனது மனைவி சத்யபாமாவுடன் சேர்ந்து தரிசனம் தராமல் , தனது சகோதரன் பலராமனோடும், சகோதரி சுபத்திரையுடனும் சேர்ந்து தரிசனம் தருகிறார்! இதன் தாத்பரியம் சரியாகப் புரியவில்லை! தெரிந்தவர் யாரேனும் சொல்லுங்களேன்!
கூடப் பிறந்தோருடன் கண்ணன் தரிசனம் தருவதை பற்றி ஒரு சிறு பாடல், வெண்பா வடிவில்!
அன்புடன் ரமேஷ்
தன்னுதிரத் தோடுதித்த தங்கை தமையனையும்
தன்னுடனே கர்ப்ப கிரஹத்தில் கூட்டிவைத்து
கண்ணனவன் காட்சிதரும் மாட்சியினைப் பெற்றதுவாம்
மன்னுபுகழ் பூரித் தலம்
(பல விகற்ப இன்னிசை வெண்பா)