பிரதோஷப் பாடல்- 36
வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பாடலைப் பதிவு செய்கிறேன்- இந்தப் பிரதோஷ தினத்தன்று.
இந்தப் பாடல் சரபேஸ்வரரைப் பற்றியது. அதிகமாக யாரும் கேட்டிராத ஒரு கதை!
நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதைத்த பின்னும் விஷ்ணுவின் கோபம் தணியவில்லை ! அவரது சீற்றத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல் மூவுலகோரும் வாடினார்கள். அவருடைய சினத்தைத் தணிக்குமாறு சிவபெருமானை வேண்டினர். அவர்களுடைய வேண்டுதலுக்கு இணங்கிய சிவபிரானும், சிங்கமுகம், ஆயிரம் கைகள், எட்டு கால்கள்,பருந்தொன்றின் இறக்கைகள் இவை கொண்ட ஒரு உருவம் எடுத்து நரசிம்மரோடு போரிட்டு அவரை வென்று அடக்கினார். சினம் தணிந்த நரசிம்மரும் தனது சுயவுருவை அடைந்தார் என்று கூறுகிறது சிவபுராணம்.
இந்தப் பிரதோஷத்தன்று இவ்வரலாறைக் குறிக்கும் இப்பாடலை மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்
பி.கு: படத்தில் ஆயிரம் கைகள் காட்டப்படவில்லை!
பிரதோஷப் பாடல்
பிரகலாதன் குரல்கேட்டு நரசிம்ம உருவெடுத்து இரணியனைக் கொன்றபின்னும்
திருமாலின் தணியாத சீற்றத்தின் தணல்தாக்கி மூவுலகும் வருந்தி வாட
அரிமாவின் சிரத்தோடும் ஆயிரம் கரத்தோடும் பருந்தொன்றின் இறக்கையோடும்
சரபமெனும் உருவெடுத்து மாலுடன் பொருதியவர் சீற்றம் தணித்த சிவனே!